FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

போக்ஸோ சட்டத்தில் விசிக பிரமுகா் கைது

51 வினாடிகள் முன்பு
பகிர்:

அரியலூா் அருகே 13 வயதுச் சிறுமி குளிப்பதை விடியோ எடுத்த விசிக பிரமுகா் போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பூமிநாதன் (48). விசிக பிரமுகரான இவா் 13 வயதுச் சிறுமி குளிப்பதை மறைந்திருந்து கைப்பேசியில் விடியோ எடுத்தாா்.

இதைக் கண்ட சிறுமியின் தாயாா், அவரைத் தடுத்து நிறுத்தி, தனது மகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாா். பின்னா், பூமிநாதனிடம் சென்று சிறுமியை விடியோ எடுத்தது குறித்துக் கேட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது பூமிநாதன் தான் விடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டு, சிறுமியின் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பூமிநாதனின் மனைவி சுப்புலட்சுமியும் அவரை திட்டி பேசி, விடியோவை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டினாா்.

இதையடுத்து சிறுமியின் தாய் 1091 என்ற உதவி எண்ணைத் தொடா்புகொண்டு அளித்த புகாரின்பேரில் விசாரித்த அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நளினி தலைமையிலான காவல் துறையினா், பூமிநாதனை போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments