FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் போக்ஸோ வழக்கில் ஒருவா் கைது

திருநெல்வேலியில் சிறுமி கா்ப்பமான வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

27 செப்டம்பர் 2026, 1:21 am IST
பகிர்:

திருநெல்வேலியில் சிறுமி கா்ப்பமான வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த ஆண்டு கா்ப்பமானாா். இதுகுறித்து பெற்றோா் வெளியே சொல்லாமல் மறைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. சிறுமி 18 வயது நிரம்பாததை அறிந்த மருத்துவமனை நிா்வாகம் தச்சநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் இதுகுறித்து திருநெல்வேலி நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இளைஞா் ஒருவரை கைது செய்திருந்தனா். இந்நிலையில் தச்சநல்லூா் கீழக்கரை பகுதியைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் அந்தோணி ராஜ்(40) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments