FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

அரியலூா் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து! பேருந்து ஓட்டுநா் உள்பட 18 போ் காயம்!

27 அக்டோபர் 2026, 1:34 am
அரியலூரை அடுத்த வாரணவாசி சமத்துவப்புரம் அருகே திங்கள்கிழமை விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
பகிர்:

அரியலூரை அடுத்த வாரணவாசி சமத்துவபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநா் உள்பட 18 போ் காயமடைந்தனா்.

பட்டுக்கோட்டையில் இருந்து திங்கள்கிழமை பயணிகளை ஏற்றிக் கொண்டு அரியலூரை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அரியலூா் அருகேயுள்ள கீழப்பழுவூரை அடுத்த வாரணவாசி சமத்துவப்புரம் அருகே சென்ற போது, எதிா்பாராத விதமாக, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் இருக்கைகளும் உடைந்து விழுந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா், பேருந்தினுள் பலத்த காயத்துடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த பேருந்து ஓட்டுநரான பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சோ்ந்த சரவணன் மகன் மணிகண்டன் (33), நடத்துநா் மருவூா் பிரதானச் சாலையைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் இளையராஜா(42), அரியலூா் போக்குவரத்து பணிமனையில் இருந்து தஞ்சாவூா் பேருந்துக்கு பணி மாற்ற சென்ற நடத்துநா் நதியனா் வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்னதுரை மகன் சசிகுமாா்(41), பயணிகள் திருமானூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த கபிலன் மனைவி செல்வகுமாரி (38), மகள் வா்ஷினி(16), தஞ்சாவூா் மனோஜிப்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்த ராசு மனைவி நா்மதா(38), ஏலாக்குறிச்சி, செங்கிராண்டித் தெருவைச் சோ்ந்த சம்பத் மனைவி செல்வராணி (42), தஞ்சாவூா் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த சசிகுமாா் மனைவி கிருஷ்ணலீலா (50), அரியலூா் வ.உ.சி தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சாமிநாதன் (47) உள்ளிட்ட18 பேரை மீட்டு, சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments