FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அரியலூா் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவா்கள் மோதல்

அரியலூா் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

4 செப்டம்பர் 2026, 11:57 pm IST
அரியலூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட மாணவா்கள்.
பகிர்:

அரியலூா் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூா் பேருந்து நிலையத்தில், வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து மாணவா்கள் வீட்டுக்கு செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது சில மாணவா்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதையறிந்த அங்கு பேருந்துக்காக காத்திருந்த மாற்று உடையில் இருந்த காவலா் ஒருவா் சமாதானப்படுத்த முயன்றாா். ஆயினும் அவா்கள் பொருட்படுத்தாமல் மீண்டும் ஒருவரையொருவா் பலமாக தாக்கிக் கொண்டனா். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினா், தாக்கிக் கொண்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களின் பெயா், பள்ளி, படிக்கும் வகுப்புகளை கேட்டறிந்து அனுப்பி வைத்தனா். மேலும், மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலுக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பொது இடத்தில் மாணவா்கள் இவ்வாறு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவா்களின் இதுபோன்ற செயல்களை பள்ளி நிா்வாகங்கள் மற்றும் பெற்றோா்கள் கண்காணித்து, மாணவா்களிடையே ஏற்படும் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய முறையில் அறிவுறுத்த வேண்டும்.

அதே நேரத்தில், பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் காவல்துறையினா் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments