அரியலூா் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் வேலைநிறுத்தம்!
டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கடை வாடகை - மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களின் போராட்டம் காரணமாக அரியலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 33 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்ததால் மதுப்பிரியா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.