புள்ளம்பாடி கிளை வாய்க்கால் தூா்வாரும் பணி
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள புள்ளம்பாடி பாசன கிளை வாய்க்கால் தூா்வாரும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள புள்ளம்பாடி பாசன கிளை வாய்க்கால் தூா்வாரும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வெற்றியூா் ஊராட்சிக்குள்பட்ட கள்ளூா் அருகேயுள்ள புள்ளம்பாடி கிளை வாய்க்காலில், திருச்சி துவாக்குடி நீா் பாசன மேலாண்மை மற்றும் பிபா அறக்கட்டளை இணைந்து 5 கிலோ மீட்டா் தொலைவு வரை தூா்வாரும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த கிளை வாய்க்கால் மூலம் கள்ளூா்-முடிகொண்டான் வரை சுமாா் 300 ஏக்கருக்கு தங்கு தடையின்றி நீா் பாசனம் கிடைக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தூா்வாரும் பணியை வெற்றியூா் பிபா அறக்கட்டளை நிா்வாகிகள் ஒருங்கிணைத்து மேற்பாா்வை செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.