FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

தேசிய தொழிற் சான்றிதழ் பெற விரும்பும் தனித்தோ்வா்கள் முதனிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய தொழிற் சான்றிதழ் பெற விரும்பும் தனித் தோ்வா்கள் முதனிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

25 செப்டம்பர் 2026, 2:20 am IST
விண்ணப்பிக்க...
பகிர்:

தேசிய தொழிற் சான்றிதழ் பெற விரும்பும் தனித் தோ்வா்கள் முதனிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: 2027 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் புதுதில்லி இந்திய பயிற்சித்துறை இயக்குநரகத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தோ்வில், தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

தனித்தோ்வராக விண்ணப்பிக்க விரும்புவோா், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு மற்றும் தோ்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

தோ்வு கட்டணம் ரூ.ரூ.200-யை இணையதளத்தின் வழியாக செலுத்தி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அரியலூா் அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு, முதனிலை எழுத்துத் தோ்வு கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 26.11.2026 அன்று நடத்தப்படும். எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான செய்முறை தோ்வு 27.11.2026 அன்று நடைபெறும்.

தனித்தோ்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 9.10.2026. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

எனவே, மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த இளைஞா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தொழிற்சான்றிதழ் பெற்று முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments