FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரூருக்கு வந்தது சென்னை அருங்காட்சியகப் பேருந்து

மாணவர்கள் பார்வையிடுவதற்காக கரூர் மாவட்டம் ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்னை அரசு அருங்காட்சியகப் பேருந்து சனிக்கிழமை கொண்டு வரப்படுகிறது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

மாணவர்கள் பார்வையிடுவதற்காக கரூர் மாவட்டம் ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்னை அரசு அருங்காட்சியகப் பேருந்து சனிக்கிழமை கொண்டு வரப்படுகிறது.

சென்னை அரசு அருங்காட்சியகத்தை சேர்ந்த பேருந்து கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த பேருந்தில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், செப்பேடுகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இதனை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இதையடுத்து இந்த பேருந்து இன்று கரூர் மாவட்டம் ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதனை இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாக பார்வையிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments