அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள்: முதல்வருக்கு கூட்டுறவு வங்கி நன்றி தெரிவித்து தீர்மானம்
அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு
அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு முதல்வர், துணை முதல்வருக்கு நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கரூர் நகர கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழு முதல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எஸ்.திருவிகா தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.பாஸ்கரன், வங்கி மேலாண்மை இயக்குநர் வி.வள்ளி, பொதுமேலாளர் ஆர்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
106ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த வங்கியை மாவட்டத்தில் சிறந்த செயல்பாடு உள்ள வங்கியாக மாற்றுவது, அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர், துணை முதல்வர், மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது,
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் அணையை கட்ட நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வங்கி மேலாளர்கள், சங்க உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.