FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழுங்க பரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது.  
தொடர்ந்து திருமொழித்திருநாட்களின் பகல் பத்து நாட்களான முதலாம் திருநாள், இரண்டாம் திருநாள் என திங்கள்கிழமை வரை 10-ஆம் திருநாள் நடைபெற்றது. 
ஒவ்வொரு திருநாளிலும் சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாத சுவாமி எழுந்தருளினார். இதில் 10 ஆம் திருநாளான திங்கள்கிழமை மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில் ரெங்கநாத சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து திருவாய்மொழித்திருநாளின் இராப்பத்து  முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவர்களுக்கு உகந்த மாதமான மார்கழி மாதத்தின் வைகுந்த ஏகாதசி நாளில் நடைபெறும் இந்த பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரும் சொர்க்கம் சென்றடைவர் என்பது ஐதீகம் என்பதால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் அதிகளவில் கோயிலில் குவியத்தொடங்கினர். தொடர்ந்து காலை 5.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பரமபத வாசல் வழியாக அபயபிரதான ரெங்கநாத சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து கோவிந்தா, கோவிந்தா, ரெங்கனுக்கு கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர். 
பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் கூடியதால் கரூர் நகர காவல்நிலையத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments