மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக கடவூரில் 34.2 மி.மீ. பதிவு
கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. மொத்தம் 116.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக கடவூரில் 34.2 மி.மீ. பதிவானது.
கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. மொத்தம் 116.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக கடவூரில் 34.2 மி.மீ. பதிவானது.
தமிழகம் முழுவதும் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4 ஆம் தேதி முதல் கரூர் மாவட்டத்திலும் அவ்வப்போது பெய்துவரும் மழையால் கடந்தாண்டைப் போல இல்லாமல் நிகழாண்டில் வெப்பத்தின் தாக்கம் இன்றி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையின் அளவு விவரம் (மி.மீ): கரூர் - 1.1, அரவக்குறிச்சி - 3.2, க.பரமத்தி - 1.2, கிருஷ்ணராயபுரம் - 26, மாயனூர் - 18, பஞ்சப்பட்டி - 15.4, கடவூர் - 34.2, பாலவிடுதி - 11.2, மைலம்பட்டி - 6. மொத்தம் 116.30 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.