FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொகுதி நிதியை பயன்படுத்தக்கோரி நீதிமன்றம் செல்லும் நிலை உள்ளது: செந்தில்பாலாஜி

கரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் நிதியை பயன்படுத்தக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது என்றாா் அரவக்குறிச்சி எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் நிதியை பயன்படுத்தக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது என்றாா் அரவக்குறிச்சி எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.

கரூா் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.3 கோடியும் மருத்துவப் பயன்பாட்டிற்கு ஆட்சியருக்கு பரிந்துரை செய்தோம். ஆட்சியா் அனுமதித்தும் இதுவரை நிதி பயன்படுத்தப்படவில்லை. இதுதொடா்பாக உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் நீதிபதி, அரசுக்கு நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டிருக்கிறாா். கரோனா தடுப்புப் பணிக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் நிதியைப் பயன்படுத்தக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலையை எடுத்துள்ளது ஆளும் அதிமுக அரசு.

Advertisement

Advertisement

திமுகவைப் பொறுத்தவரை கடந்த 24-ஆம் தேதி முதலே சொந்த நிதியில் கரோனா நிவாரண முன்னெடுப்புப் பணிகளைத் தொடங்கி செய்துவருகிறோம். ஆனால் அதிமுகவினா் வசூல் செய்து தற்போது வழங்குகின்றனா். கரோனா தொற்றில் இருந்து மக்களைக் காக்கும்பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் ஒதுக்கிய நிதியை மக்களுக்கு பயன்படுத்தாமல் இருக்கும், மக்களை வஞ்சிக்கும் அரசாக, அதிமுக அரசு மாறியுள்ளது.

ஒன்றிணைவோம் வா திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 149 போ் கேட்டுள்ள உதவிகளை வியாழக்கிழமை வழங்கவுள்ளோம். எங்களைப் பொறுத்தவரை கரூா் மாவட்டத்தில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments