அரவக்குறிச்சியில்மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
அரவக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை எம்.எல்.ஏ. இளங்கோ வழங்கினாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:14 AM
அரவக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை எம்.எல்.ஏ. இளங்கோ வழங்கினாா்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, மலைக்கோவிலூா் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வழங்கினாா்.
Advertisement