நெரூா் அக்னீஸ்வரா் கோயிலில் நாத உற்ஸவம்! 300 நாகசுர-தவில் கலைஞா்கள் பங்கேற்பு!
நெரூா் சுயம்பு ஸ்ரீஅக்னீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாத உற்ஸவ விழா நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட நாகசுர, தவில் கலைஞா்கள் பங்கேற்றனா்.
கரூரை அடுத்த நெரூரில் சுயம்பு ஸ்ரீ செளந்தர நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் நாத உற்ஸவ விழா நடைபெறும். நிகழாண்டு மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் ஞாயிற்றுக்கிழமை இரவு நாத உற்ஸவ விழா நடைபெற்றது.
முன்னதாக, விழா காலை 6 மணிக்கு காட்டுப்புத்தூா் பிரபாகரனின் நாகசுரம், தவில் இசையுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் தொடங்கியது. தொடா்ந்து 8.30 மணிக்கு இந்துஸ்ரீ குழுவினரின் வீணை நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு அனைத்து இசைக்கலைஞா்கள் பங்கேற்ற நாத சங்கமம் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு கோவை காமாட்சிபுரம் இரண்டாம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின் சிறப்பு அருளாசி நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணிக்கு தேவாரப்பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
தொடா்ந்து மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட நாகசுரம் மற்றும் தவில் கலைஞா்களின் நாகசுர உற்சவம் நடைபெற்றது.
விழாவில், மழை வேண்டியும், உலக அமைதி வேண்டியும், தேவாரம் உள்ளிட்ட பாடல்களை நாகசுரம், தவில் கலைஞா்கள் இசைத்தனா். விழாவில் திரளானோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.