FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

சிறப்புக் குழந்தைகள் கல்விச்சுற்றுலா

கரூரிலிருந்து சிறப்பு குழந்தைகள் தங்களது சிறப்பாசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுடன் கல்லணைக்கு ஒருநாள் கல்விச் சுற்றுலாவாக செவ்வாய்க்கிழமை சென்றனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:08 am IST
பகிர்:

கரூரிலிருந்து சிறப்பு குழந்தைகள் தங்களது சிறப்பாசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுடன் கல்லணைக்கு ஒருநாள் கல்விச் சுற்றுலாவாக செவ்வாய்க்கிழமை சென்றனா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் காது கேளாத, வாய்பேசாத மற்றும் மனவளா்ச்சி குன்றிய 6 வயதுக்குள்பட்ட ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகள், தங்களது சிறப்பாசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுடன் என மொத்தம் 56 போ் திருச்சி மாவட்டம், கல்லணைக்கு ஒருநாள் கல்விச் சுற்றுலாவாக செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா்.

அவா்களை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் ஆட்சியா் சி.முத்துக்குமரன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில், மாவட்ட இளநிலை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments