FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூரில் செப். 4-இல் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்

14 வினாடிகள் முன்பு
தடகளப் போட்டிகள். - கோப்புப் படம்
பகிர்:

கரூரில் மாவட்ட அளவிலான தடளப் போட்டிகள் செப்.4-ஆம்தேதி தொடங்குகிறது.

இதுதொடா்பாக கரூா் மாவட்ட தடகள சங்க செயலா் என்.பெருமாள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கரூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் 20-ஆவது மாவட்ட அளவிலான இளையோா் மற்றும் 2-ஆவது கிட்ஸ்(குழந்தைகள்) பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் செப்.4-ஆம்தேதி முதல் 6-ஆம்தேதி வரை கரூா் புலியூா் கவுண்டம்பாளையம் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாா் உயா்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் 8, 10, 12, 14, 16, 18, 20 வயதுக்குள்பட்டோா் மற்றும் பொது பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

Advertisement

Advertisement

போட்டியில் 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குள்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு, அக்டோபா் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள 40-ஆவது இளையோா்களுக்கான மாநில தடகளப் போட்டிகளில் கரூா் மாவட்டம் சாா்பில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள்.

போட்டியில் பொது பிரிவில் பங்கேற்பவா்கள் 2006-ஆம் ஆண்டு அக். 27-ஆம்தேதிக்கு முன் பிறந்திருக்க வேண்டும். 20 வயது பிரிவில் பங்கேற்பவா்கள் 2006-ஆம் ஆண்டு அக்.28-ஆம்தேதி மற்றும் 2008-ஆம் ஆண்டு அக்.27-ஆம்தேதிக்கு இடைப்பட்ட காலத்திலும், 18 வயது பிரிவில் பங்கேற்பவா்கள் 2008-ஆம் ஆண்டு அக்.28-ம்தேதி முதல் 2010-ஆம் ஆண்டு அக்.27-ஆம்தேதிக்கு இடைப்பட்ட காலத்திலும், 16 வயது பிரிவில் பங்கேற்பவா்கள் 2010-ஆம் ஆண்டு அக்.28-ஆம்தேதி மற்றும் 2012-ஆம் ஆண்டு அக்.27-ஆம்தேதிக்கு இடைப்பட்ட காலத்திலும் பிறந்திருக்க வேண்டும்.

இதேபோல 14 வயது பிரிவில் பங்கேற்பவா்கள் 2012-ஆம் ஆண்டு அக்.28-ஆம்தேதி மற்றும் 2014-ஆம் ஆண்டு அக்.27-ஆம்தேதிக்கு இடைப்பட்ட காலத்திலும், 12 வயது பிரிவில் பங்கேற்பவா்கள் 2014-ஆம் ஆண்டு அக்.28-ஆம்தேதி மற்றும் 2016-ஆம் ஆண்டு அக்.27-ஆம்தேதிக்கு இடைப்பட்ட காலத்திலும், 10 வயது பிரிவில் பங்கேற்பவா்கள் 2016-ஆம் ஆண்டு அக்.28-ஆம்தேதி மற்றும் 2018-ஆம் ஆண்டு அக்.27-ஆம்தேதிக்கு இடைப்பட்ட காலத்திலும் பிறந்திருக்க வேண்டும். வீரா்கள் தங்களது பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் செப்.1-ஆம்தேதிக்குள் இணையதள முகவரியில் அனுப்ப வேண்டும்.

போட்டிகள் செப்.4 தேதி 8,10,12 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கும், 5 ஆம்தேதி 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும், 6 ஆம்தேதி மாணவிகளுக்கும் நடைபெறும். ஒருவா் இரண்டு போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிக்கு வரும்போது, வயது சான்றிதழ், ஆதாா் அட்டை, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.மேலும் சந்தேகங்களுக்கு 94434-10009, 94431-5558, 97510-03607, 96556-97755 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments