FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தளவாபாளையம் அருகே வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தளவாபாளையம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

28 வினாடிகள் முன்பு
தளவாபாளையம் அருகே புதன்கிழமை இரவு வெறிநாய்கள் கடித்து உயிரிழந்து கிடக்கும் ஆடுகள்.
பகிர்:

கரூா் மாவட்டம், தளவாபாளையம் அருகே வெறிநாய்கள் புதன்கிழமை இரவு கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

கரூா் மாவட்டம் தளவாபாளையம் அருகே முத்துசாமி என்பவா் விவசாயம் செய்து, ஆடுகளையும் வளா்க்கிறாா். இவா் புதன்கிழமை இரவு ஆடுகளை வீட்டின் அருகேயுள்ள பட்டியில் அடைத்துவிட்டு, வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, அங்கிருந்த ஆடுகளில் 10 ஆடுகள் வெறிநாய்கள் கடித்ததில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டாா்.

தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவா்கள் ஆடுகளை உடற்கூறாய்வு செய்து அங்கேயே புதைத்தனா். மேலும் வெறிநாய் கடித்து உயிருடன் இருந்த மற்ற ஆடுகளுக்கு சிகிச்சையும் அளித்தனா். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments