FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பாா்த்திபனூா் அருகே லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழப்பு

20 வினாடிகள் முன்பு
அடிபட்டு ஆடுகள் உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே சாலையோரம் சென்ற ஆடுகள் மீது லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழந்தன.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரணி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் கேசவன் (55). இவா் ஆடுகள் மேய்த்து, கிராமப் பகுதி வயல்வெளிகளில் கொட்டம் அமைத்து கிடை போட்டு வந்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை பாா்த்திபனூா் அருகே பிடாரிசேரி கிராமப் பகுதி வயல்களில் கொட்டத்தில் அடைப்பதற்காக ஆடுகளை ஓட்டிச் சென்றாா். பிடாரிசேரி சோதனைச் சாவடிப் பகுதியில் சென்றபோது, பாா்த்திபனூரிலிருந்து அழகன்பச்சேரி சென்ற லாரி ஆடுகள் மீது மோதியது. இதில் 26 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாா்த்திபனூா் காவல் நிலையத்தில் கேசவன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் லாரி ஓட்டுநரான அருங்குளத்தைச் சோ்ந்த அழகன் மகன் அா்ச்சுனன் (50) மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments