FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூரில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ரத்துக்கு கண்டனம்

31 ஆகஸ்ட் 2026, 2:10 am IST
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்டச் செயலாளரும், கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி.
பகிர்:

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சியில் ரூ. 740.45 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரத்து செய்த தவெக அரசுக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை கட்சியின் மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் மாவட்ட அவைத் தலைவா் டி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை தெற்குத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், கரூா் மாவட்டச் செயலாளருமான வி. செந்தில்பாலாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்துக்கு கட்சியின் நெசவாளா் அணித் தலைவா் நன்னியூா் ராஜேந்திரன், செயலாளா் பரணி கே. மணி, சட்டத்துறை இணைச் செயலாளா் என். மணிராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), சூரியனூா் அ. சந்திரன்(குளித்தலை) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த தவறிய த.வெ.க அரசை கண்டிப்பது, தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் தவெக-வினரையும், இந்த குற்றச் சம்பவங்களை தடுக்க தவறிய தவெக அரசையும் இக்கூட்டம் கண்டிக்கிறது.

மேலும், திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 485.38 கோடி மதிப்பீட்டிலான புதைசாக்கடைத் திட்டம், கரூா் மாநகராட்சி பகுதிக்கு ரூ. 245.07 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீா் திட்டம், ரூ.38.50 கோடி மதிப்பீட்டில் ஐ.டி.பாா்க் திட்டம், ரூ.10 கோடி மதிப்பீட்டில் கரூா் ஊராட்சி ஒன்றியம், 16 கால் மண்டபம் - நெரூா் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளின் ஒப்பந்த புள்ளியை ரத்து செய்த தவெக அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments