FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

பாலவிடுதி மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டம், பாலவிடுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றிடக் கோரி வீ த லீடா் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 ஜூலை 2026, 1:44 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீ த லீடா்ஸ் அமைப்பினா்
பகிர்:

கரூா் மாவட்டம், பாலவிடுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றிடக் கோரி வீ த லீடா் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலவிடுதி கவரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிா்வாகி நவீன்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகி நாகராஜ் முன்னிலை வகித்தாா்.

கடவூா் வட்டாரத்தில் உள்ள பாலவிடுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 300 மீ. தொலைவில் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments