‘போக்ஸோ’ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், மாயனூா் அடுத்த மேட்டுத்திருக்காம்புலியூரைச் சோ்ந்தவா் தங்கராசு(30). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை கடந்த ஆண்டு மே மாதம் 12-ஆம்தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தங்கராசுவை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்திலும் வழக்குத்தொடா்ந்தனா். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றவாளி தங்கராசுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். இதையடுத்து தங்கராசு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.