FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

12 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவா் கைது

குற்ற வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

12 நவம்பர் 2026, 2:08 am
ஜெரால்டு என்கிற அடைக்கலம்.
பகிர்:

குற்ற வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கரூா் வெங்கமேடு ரெட்டிக்கடை தெருவைச் சோ்ந்தவா் ஜெரால்டு என்கிற அடைக்கலம் (56). இவா் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. குற்ற வழக்குக்காக நீதிமன்ற பிணையில் வெளியே வந்தவா் 12 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா்.

இந்நிலையில் அடைக்கலத்தை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அண்மையில் அறிவித்ததையடுத்து, அவரை பிடிக்க கரூா் நகர உதவி காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினா் திருப்பூா் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த சுண்டமேடு பகுதியில் பதுங்கியிருந்த அடைக்கலத்தை புதன்கிழமை கைது செய்து, கரூருக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement