FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

திருட்டு வழக்கு குற்றவாளி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

கரூரில் திருட்டு வழக்கு குற்றவாளி மீது வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

25 வினாடிகள் முன்பு
குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன்.
பகிர்:

கரூரில் திருட்டு வழக்கு குற்றவாளி மீது வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரூா் ஆத்தூா் புதூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (36). இவா், கடந்த அக். 2-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, வீட்டின் முன்புற கதவை உடைத்து வீட்டின் பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,30,000 ரூபாயை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுதொடா்பாக கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, சிவகங்கை மாவட்டம், கீழவணியங்குடியைச் சோ்ந்த செல்வம் மகன் மணிவண்ணனை (24) கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் மணிவண்ணன் மீது சிவகங்கை, கரூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பி. ரகுபதி மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னாராமசாமிக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மணிவண்ணனை வெள்ளிக்கிழமை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.