கடவூா்: வெறிநாய் கடித்ததில் 2 பெண்கள் உள்பட 13 போ் காயம்
கடவூா் அருகே சனிக்கிழமை வெறிநாய் கடித்ததில் 2 பெண்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா்.
கடவூா் அருகே சனிக்கிழமை வெறிநாய் கடித்ததில் 2 பெண்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே தரகம்பட்டியில் உள்ள கடைவீதி பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சனிக்கிழமை காலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கடிக்க முயன்றது. உடனே, நாயை விரட்ட முயன்ற இரு பெண்கள் உள்பட 13 பேரை கடித்தது. இதையடுத்து காயமடைந்த 13 பேரும் மையலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் 5 போ் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து தகவல் அறிந்த தரகம்பட்டி ஊராட்சி மன்றச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட ஊராட்சி மன்றப் பணியாளா்கள், பொதுமக்களை கடித்துக் குதறிய வெறி நாயை பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டனா். மேலும் தரகம்பட்டி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அவ்வப்போது மனிதா்களை மட்டுமின்றி கால்நடைகளையும் தாக்குவதால், உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement