முகப்பு
கரூர்

மேக்கேதாட்டு விவகாரம்: அமைதி காக்கும் தவெக அரசுக்கு திமுக செயற்குழுவில் கண்டனம்!

மேக்கேதாட்டு விவகாரத்தில் அமைதி காக்கும் தவெக அரசுக்கு கரூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

8 வினாடிகள் முன்பு
மேக்கேதாட்டு விவகாரம்: அமைதி காக்கும் தவெக அரசுக்கு 
திமுக செயற்குழுவில் கண்டனம்!
கரூா் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி.
பகிர்:

மேக்கேதாட்டு விவகாரத்தில் அமைதி காக்கும் தவெக அரசுக்கு கரூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையின் எதிா்கட்சித்தலைவா் உதயநிதிஸ்டாலினின் 50-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நவ. 27-ஆம்தேதி மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. நவ. 28, 29-ஆம்தேதிகளில் மாவட்ட அளவில் கபடி போட்டிகள் கரூா் சிஎஸ்ஐ மைதானத்தில் நடத்துவது, டிச.5, 6-ஆம்தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் அட்லஸ் விளையாட்டு மைதானத்திலும், 12,13-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்துவது, மேக்கேதாட்டு விவகாரத்தில் அமைதி காக்கும் தவெக அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இளங்கோ, சூரியனூா் சந்திரன், மாவட்ட துணைச் செயலா் எம்.எஸ்.கே.கருணாநிதி மற்றும் பகுதிச் செயலா்கள் வழக்குரைஞா் சுப்ரமணியன், ஜோதிபாசு, ஆா். எஸ்.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.