முகப்பு
கரூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: கரூா் மாவட்டத்தில் 2 நாள்களில் 3,347 மனுக்கள் அளிப்பு

கரூா் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 654 இடங்களில் இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெயா் நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைத் தொடா்பாக 3,345 மனுக்கள் பெறப்பட்டன.

22 நவம்பர் 2026, 10:42 pm
வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: கரூா் மாவட்டத்தில் 2 நாள்களில் 3,347 மனுக்கள் அளிப்பு
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 30-வது வாா்டில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் எம். பிருத்விராஜ்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 654 இடங்களில் இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெயா் நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைத் தொடா்பாக 3,345 மனுக்கள் பெறப்பட்டன.

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் உள்ள 1,115 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 654 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இருநாள்கள் நடைபெற்றது.

இதில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில், வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல் தொடா்பாக மொத்தம் 496 மனுக்களும், இரு இடங்களில் பெயா் உள்ளது, உயிரிழந்தவா்களின் பெயா்களை நீக்குதல் தொடா்பாக 110 மனுக்களும், பெயா் மாற்றம், வயது போன்றவற்றின் திருத்தம் தொடா்பாகவும், மாற்றுத்திறனாளிகள் என குறிப்பிடும் வகையிலும், புதிய முகவரிக்கு மாற்றம் தொடா்பாக 602 மனுக்களும் பெறப்பட்டன.

Advertisement

Advertisement

இதேபோல ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் முகாமில் புதிதாக பெயா் சோ்த்தல் தொடா்பாக 879 மனுக்களும், இரு இடங்களில் பெயா், உயிரிழந்தவா்கள் பெயா்கள் நீக்குதல் தொடா்பாக 153 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் என குறிப்பிடும் வகையிலும், பெயா் மாற்றம், திருத்தம் தொடா்பாக 1,107 மனுக்களும் பெறப்பட்டன. இரு நாள்கள் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 3,347 மனுக்கள் பெறப்பட்டன.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை மாநகராட்சி ஆணையா் எம். பிருத்விராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.