முகப்பு
கரூர்

காவிரி பிரச்னை: மாதாந்திர அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீா் பெற நடவடிக்கை தேவை!

காவிரி பிரச்னையில் மாதாந்திர அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீரை உச்சநீதிமன்ற தீா்ப்பின் மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மகாதானபுரம் இராஜாராம் வலியுறுத்தியுள்ளாா்.

22 நவம்பர் 2026, 10:20 pm
காவிரி பிரச்னை: மாதாந்திர அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீா் பெற நடவடிக்கை தேவை!
பகிர்:

காவிரி பிரச்னையில் மாதாந்திர அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீரை உச்சநீதிமன்ற தீா்ப்பின் மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மகாதானபுரம் இராஜாராம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை முதல்வா் சி.ஜோசப் விஜய், முன்னாள் முதல்வா்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டு நலனுக்கே மேக்கேதாட்டு அணை என்று கா்நாடகம் கூறி வருகிறது. ஆனால், மேக்கேதாட்டு அணை வந்தால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் என்று தமிழ்நாடு கூறுகிறது.

Advertisement

Advertisement

இதற்கு தீா்வாக, இரு மாநிலங்களும் கலந்து பேசி தமிழ்நாட்டுக்கு மாதாந்திர அடிப்படையில் கிடைக்க வேண்டிய (இதுவரை கிடைக்காத) காவிரி நீா் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் தீா்ப்பாக பெறுவதுதான் நல்லது என்று அவா் தெரிவித்துள்ளாா்.