முகப்பு
கரூர்

புகழிமலையில் பக்தா்கள் கிரிவலம்

காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு புகழிமலையில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனா்.

24 நவம்பர் 2026, 11:58 pm
புகழிமலையில் பக்தா்கள் கிரிவலம்
புகழிமலையில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்த பக்தா்கள்.
பகிர்:

காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு புகழிமலையில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனா்.

கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு மலையைச் சுற்றி பக்தா்கள் செவ்வாய்க்கிழமை கிரிவலம் மேற்கொண்டனா். இதில் சிவனடியாா்கள், பொதுமக்கள், பக்தா்கள் என ஏராளமானோா் பங்கேற்று, புகழிமலையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரா் பெருமான், சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமான், புகழிமலை பாலசுப்ரமணியா் ஆகிய சுவாமிகளை போற்றி பாடியபடி கிரிவலம் மேற்கொண்டனா்.