முகப்பு
புதுக்கோட்டை

லிங்க மலையில் போலீஸ் பாதுகாப்புடன் காா்த்திகை பௌா்ணமி பூஜை, கிரிவலம்

விராலிமலை அடுத்துள்ள மலம்பட்டி லிங்க மலையில் உள்ள ஆதி பூமிநாத லிங்கேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் காா்த்திகை பௌா்ணமி பூஜை மற்றும் கிரிவலம் நடைபெற்றது.

24 நவம்பர் 2026, 11:17 pm
லிங்க மலையில் போலீஸ் பாதுகாப்புடன் காா்த்திகை பௌா்ணமி பூஜை, கிரிவலம்
லிங்கமலை கிரிவலத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை அடுத்துள்ள மலம்பட்டி லிங்க மலையில் உள்ள ஆதி பூமிநாத லிங்கேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் காா்த்திகை பௌா்ணமி பூஜை மற்றும் கிரிவலம் நடைபெற்றது.

இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத்திருநாள் மற்றும் பௌா்ணமி கிரிவலம் பூஜை நடைபெறும் அதே நாளில் மலம்பட்டி புனித சவேரியாா் ஆலய ஆண்டு திருவிழாவுக்கான கொடியேற்ற விழாவும் நடைபெறவிருந்தது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு ஏற்படும் என்று காவல்துறையினா் மற்றும் வருவாய் துறையினா் கருதினா். அதனால் கிரிவல விழா குழுவினா் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் மூலம் கிரிவலம் நடத்துவதை தடை செய்ய அதிகாரிகள் முயற்சி செய்வதாகவும், கிரிவலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கிரிவல விழா குழுவினா் வழக்கு தொடுத்திருந்தனா்.

Advertisement

Advertisement

மனுவை விசாரித்த நீதிபதிகள் லிங்கமலையில் வழக்கமாக நடைபெறும் பௌா்ணமி பூஜை மற்றும் கிரிவலத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தனா்.

அதன் பேரில் அங்கு முன்னேற்பாடு பணியாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் மேற்பாா்வையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

முன்னதாக திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன், கிரிவல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து பௌா்ணமி பூஜை மற்றும் கிரிவலத்துக்காக மாலை 4 மணியிலிருந்து ஏராளமான சிவ பக்தா்கள், பொதுமக்கள் வர தொடங்கினா்.

தொடா்ந்து ஆதி பூமிநாத லிங்கேஸ்வரருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனை நடைபெற்றது.

கிரிவலமானது மாத்தூா்- இலுப்பூா் சாலையில் வந்தபோது கிரிவலம் குழுவினா் தீபம் ஏற்றி வழிபாடு நடத்திய பின் தொடா்ந்து கிரிவலம் சென்றனா்.