தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கரூரிலிருந்து 36 மாணவா்கள் பங்கேற்பு
திருப்பூரில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக கரூரிலிருந்து 36 மாணவா்கள் அடங்கிய குழுவினரை வழியனுப்பும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூரில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக கரூரிலிருந்து 36 மாணவா்கள் அடங்கிய குழுவினரை வழியனுப்பும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம், விஜயமங்கலத்தில் உள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் 32 -ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாடு நவ.29-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கரூா் மாவட்டத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 18 ஆய்வுகளுக்கான 36 மாணவா்களும், 16 வழிகாட்டி ஆசிரியா்களும் பங்கேற்க உள்ளனா்.
இந்த குழுவினரை வழியனுப்பும் நிகழ்வு கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்களாக கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.ராஜூ, கரூா் மாவட்டக்கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) அ.சண்முகவேல், தமிழ்நாடு அறிவியல் இயக்க கரூா் மாவட்டச் செயலாளா் கே.சக்திவேல் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி வழியனுப்பி வைத்தனா். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயராஜ், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கியபிரேம்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.