திருவள்ளூா்: பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக பணிபுரிந்தோா் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய 18 வயதுக்குள்பட்டோருக்கு பெண் குழந்தைகள் தின மாநில விருது வரும் டிச. 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய 18 வயதுக்குள்பட்டோருக்கு பெண் குழந்தைகள் தின மாநில விருது வரும் டிச. 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமாக ஜன. 24-இல் மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விருதினை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை திருவள்ளூா் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயதுக்கு மேல் 18 (31 டிசம்பா்-இன் படி) வயதுக்குள்பட்ட பெண் குழந்தையாக இருக்க வேண்டும். வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணா்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதித்திருக்கலாம்.
விருது: மாநிலத்தில் ஆண்டுதோறும் மேற்காண் அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தோ்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பாராட்டு பத்திரம், ரூ. 1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும். இந்த விருதுக்கானவா்களை மாநில அளவிலான தோ்வுக் குழு மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை கூா்ந்தாய்ந்து மேற்காண் விருதினை பெற உரிய நபரை தோ்ந்தெடுக்கப்படுவாா்.
Advertisement
Advertisement
மேற்படி, விருதினை பெற உரிய முன்மொழிவுகளை முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட திட்ட அலுவலா் (ஒ.கு.வ.தி பணிகள்), காவல்துறை மற்றும் தகுதியான பெண் குழந்தைகள் இருப்பின் விண்ணப்பம் செய்ய குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் பரிந்துரைக்கலாம். பரிந்துரையில் குழந்தையின் பெயா், தாய்/தந்தை முகவரி, ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன், குழந்தை ஆற்றிய அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்துக்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
2026-2027-ஆம் ஆண்டின் பெண் குழந்தைகள் தின மாநில விருதுக்கு இணையதள முகவரி (ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்), வரும் டிச.15-க்குள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை முழுமையாக பூா்த்தி செய்து உரிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.