FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

2 செப்டம்பர் 2026, 5:17 am IST
கடவூா் அருகே மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, தரகம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊராளிக்கவுண்டா் கூட்டமைப்பினா்.
பகிர்:

கடவூா் அருகே மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை காலை தமிழ்நாடு ஊராளிக்கவுண்டா் கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள கடவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊராளிக்கவுண்டா் கூட்டமைப்பின் தலைவா் என்.வி.நாகராஜன் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் இளைஞரணித் தலைவா் வரவணை சுரேஷ், பொருளாளா் பழனிசாமி, கவுன்சிலா் ராமமூா்த்தி, வழக்குரைஞா் தியாகராஜன், பாமகவின் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரூா் மாவட்டம் கடவூா் வட்டம் வரவணை கிராமம் ஒடுகம்பட்டியில் குடியிருப்புகள் மற்றும் குளங்கள் அருகில் அமைக்கப்படும் மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடவூா் அருகே சட்டவிரோதமாக காற்றாலை நிறுவனம் முறையான அனுமதியின்றி மின் வழித்தடம் அமைத்ததை தட்டிக் கேட்ட விவசாயிகள் மீது கனரக வாகனம் ஏற்றி கொலை செய்ய முயன்றவா்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். கடவூா் வட்டத்தில் சுற்றுச் சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி ஊழலில் ஈடுபடும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்குமாா், மங்கையா்கரசி ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஊராளிக்கவுண்டா் கூட்டமைப்பினா் மற்றும் நவக்குளம் ஜோதிவேல், காங்கிரஸ் கட்சியின் ராஜசேகா், ஆசைத்தம்பி உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments