FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குன்னம் அருகே டிராக்டர் கவிழ்ந்து கூலித் தொழிலாளி சாவு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சனிக்கிழமை இரவு சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சனிக்கிழமை இரவு சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

குன்னம் அருகேயுள்ள வைத்தியநாதபுரம் ஊராட்சித் தலைவர் ராமலிங்கத்துக்கு சொந்தமான டிராக்டரில், அதே கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார் (27) ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு டிராக்டரில் ஜல்லிக் கற்கள் ஏற்றிக்கொண்டு, குன்னம்- வேப்பூர் சாலையில் உள்ள பரவாய் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

Advertisement

Advertisement

இதில், ஜல்லி கற்களின் மீது அமர்ந்திருந்த பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மங்களம் கிராமத்தைச் சேர்ந்த கூலிóத்தொழிலாளி முத்துகிருஷ்ணன் (42), இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஓட்டுநர் சசிக்குமார் பலத்த காயமடைந்தார். தகவலறிந்த குன்னம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று முத்துக்கிருஷ்ணனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments