பெரம்பலூர் நகர திமுக சார்பில் நீதி கேட்கும் பேரணி
பெரம்பலூர் நகர தி.மு.க சார்பில் நீதி கேட்கும் பேரணி விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு வானொலித் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் நகர தி.மு.க சார்பில் நீதி கேட்கும் பேரணி விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு வானொலித் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகரச் செயலர் எம். பிரபாகரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் என். ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, ச. அ. பெருநற்கிள்ளி, அவைத்தலைவர் அ. நடராஜன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில், மாவட்ட அணி நிர்வாகிகள் மகாதேவி ஜெயபால், ப. செந்தில்நாதன், தலைமைக் கழகப் பேச்சாளர் மு. விஜயரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.