FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெரம்பலூர் பனிமய மாதா கோயில் சப்பர பவனி

பெரம்பலூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பனிமய மாதா கோயில் சப்பர பவனியில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

பெரம்பலூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பனிமய மாதா கோயில் சப்பர பவனியில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். 
இக்கோயில் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் குரு ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற  விழாவில், கும்பகோணம் மறைமாவட்ட முதன்மைக் குரு தேவதாஸ் கொடியை மந்திரித்து ஏற்றி வைத்தார். தொடர்ந்து, நாள்தோறும் மாலையில் பல்வேறு கோயில்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து, கும்பகோணம் மறைமாவட்ட முதன்மைக் குரு அமிர்தசாமி தலைமையில், மறைவட்ட பங்கு குருக்கள் இணைந்து, ஆண்டுப் பெருவிழா திருப்பலி சனிக்கிழமை இரவு நடத்தினர் அதைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு ஆடம்பர தேர் பவனியை அமிர்தசாமி தொடங்கி வைத்தார். கோயில் வளாகத்தில் தொடங்கிய  தேர் பவனி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை வழியாக சென்று மீண்டும் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில், பெரம்பலூர், துறைமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். பின்னர், திருவிழா நன்றி திருப்பலி அய்யம்பேட்டை சேவியர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கு குரு ராஜமாணிக்கம், உதவி பங்கு குருக்கள் பங்கேற்றனர். கொடியேற்றத்துடன் ஆண்டுப் பெருவிழா நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments