FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

யோகமும், மனித மாண்பும் கல்வி தொடக்க விழா

பெரம்பலூர் மனவளக்கலை மன்றத்தில் யோகமும், மனித மாண்பும் கல்வி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 6 ஆகஸ்ட் 2018, 8:46 am IST
பகிர்:

பெரம்பலூர் மனவளக்கலை மன்றத்தில் யோகமும், மனித மாண்பும் கல்வி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, பாரதிதாசன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, யோகமும், மனித மாண்பும் பட்ட, பட்டயக் கல்வி வகுப்பு நடைபெற்று வருகிறது. நிகழாண்டு வகுப்பு தொடக்க விழா பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்றது. மனவளக்கலை மன்ற அறக்கட்டளை பொருளாளர் கு. கருப்பையா தலைமை வகித்தார் 
திருச்சி மண்டல செயலர் காளிதாசன் முன்னிலை வகித்தார்.                                            சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பண்பாட்டுக் கல்வியின் சிறப்பு என்னும் தலைப்பில் உலக சமுதாய சேவா சங்கத்தின் திருச்சி மண்டல தலைவரும், முதுநிலைப் பேராசிரியருமான மாலா ஜெயபிரகா பேசியது:   
தன்னையறியும் அறிவை அறியக்கூடிய கலைதான் மனவளக்கலை, யோகக்கலை. தன்னுடைய உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை உயர்த்திக் கொள்ளவும்,  குடும்பம், சமுதாயம் இவற்றில் உறவுகளை மேம்படுத்தி வாழ்ந்திட உதவும் வாழும் கலையாகும். உயர் ஒழுக்கத்தோடு வாழ்ந்து மற்றவர்களும் நலமாக வாழ உதவிடும் பண்பாட்டுக் கல்விதான் மனவளக்கலை. இன்றைய உலகுக்குத் தேவையான, அவசியமான பண்பாட்டை வழங்கும் மனவளக்கலை யோகக்கல்வி பயின்று சிறந்த ஞானாசிரியர்களாக உருவாகி அறிவு ஒளி ஏற்ற வேண்டும் என்றார் அவர். 
மனவளக்கலை முதுநிலை பட்டகல்வி மாணவி ரஞ்சனி, இறைவணக்கம், குருவணக்கம் பாடினார். மனவளக்கலை பட்ட கல்வி மாணவி ராஜேஸ்வரி தவம் நடத்தினார். அறக்கட்டளை துணைத்தலைவர் மீரா சாந்தகுமார் வரவேற்றார். அறக்கட்டளை செயலர் சா. சாந்தகுமார் நன்றி கூறினார். இதில், தவமைய விரிவாக்க துணைத் தலைவர் கு. கண்ணதாசன், பேராசிரியர் பத்மாவதி சந்திரசேகரன், சேவைநிதி துணைத்தலைவர் அகல்யா கண்ணுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments