வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் வருகை
பெரம்பலூருக்கு வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் மற்றும் காகித தணிக்கை இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.
பெரம்பலூருக்கு வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் மற்றும் காகித தணிக்கை இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் 880 வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் காகித தணிக்கை இயந்திரம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பபட்டன. இந்த இயந்திரங்களை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே .சாந்தா உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. பாதுகாப்பாக்க வைக்கப்பட்ட வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம், காகித தணிக்கை இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சி. சேதுராமன், வருவாய் கோட்டாட்சியர் நா. விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டு, அதன் செயல்பாட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வட்டாட்சியர் பாரதிவளவன், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.