FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

வாரியத் தேர்வில் சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான அரசு வாரியத் தேர்வில், பெரம்பலூர் சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

Updated On : 7 ஜூன் 2018, 8:44 am IST
பகிர்:

மாநில அளவிலான அரசு வாரியத் தேர்வில், பெரம்பலூர் சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அரசு வாரியத் தேர்வில், சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மின்னியல், மின்னணுவியல் துறையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி டி. மீனா 700க்கு 694 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஜே.ஜீவிதா 692 மதிப்பெண்கள் எடுத்து 2ஆம் இடம், மாணவர் எம். பார்க்கவன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையைச் சேர்ந்த மாணவி ச. விஐயலட்சுமி, தானியங்கித் துறையை சேர்ந்த மாணவர் ஜி.கோபிநாத் ஆகியோர் 690 மதிப்பெண்கள் பெற்று 3 ஆம் இடமும், முதலாமாண்டு மாணவர் பா. அஜீத் 800க்கு 777 மதிப்பெண்கள் பெற்று கல்லூரி அளவில் முதலிடம் பெற்றனர். 
இக்கல்லூரியைச் சேர்ந்த 49 மாணவர்கள் தியரி பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 725 மாணவர்கள் அரசு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, 21 ஆசிரியர்கள் தியரி பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 194 மாணவர்கள் அரசு வாரியத் தேர்வில் 95 சதவீதத் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், உறுதுணையாக இருந்த பேராசிரியர்களை, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் பாராட்டுத் தெரிவித்தார்.சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.ரமேஷ், தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி. சுகுமார், துறைத் தலைவர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments