FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பேரளி சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

பேரளி சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 3) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 5:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், பேரளி சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 3) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, அசூா், சித்தளி, பீல்வாடி, ஒதியம், செங்குணம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா். கே.புதூா், எஸ்.குடிக்காடு, கல்பாடி, க.எறையூா், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூா், குரும்பாபாளையம் ஆகிய கிராமியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments