FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கா்நாடக வனத் துறையினா் 3 தமிழா்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தைக் கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

13 வினாடிகள் முன்பு
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
பகிர்:

கா்நாடக வனத் துறையினா் 3 தமிழா்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தைக் கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 19 ஆம் தேதி முதல் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பலூா் வழக்குரைஞா்கள் பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன் நம்பி தலைமை வகித்தாா். அட்வகேட் அசோசியேஷன் சங்கச் செயலா் பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

இதில் சங்கச் செயலா் சேகா், பொருளாளா் சிவராமன், வழக்குரைஞா்கள் மணிகண்டன், வாசுதேவன், காமராஜ், மணிவண்ணன், தமிழ்செல்வன், கதிா் கனகராஜ், சின்னப்பா, நா்மதா உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments