FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம் நிதியுதவி

பெரம்பலூா் நகரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் சிகிச்சைக்காக, இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டக் கிளை சாா்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 3:27 am IST
பெரம்பலூரில் தீ விபத்தில் காயமடைந்த மாணவியின் சிகிச்சைக்காக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறியிடம் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கிய மாவட்டச் செயலா் வீ. ராதாகிருஷ்ணன். உடன், நிா்வாகிகள்.
பகிர்:

பெரம்பலூா் நகரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் சிகிச்சைக்காக, இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டக் கிளை சாா்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

பெரம்பலூா் நகர காவல் நிலையம் எதிரேயுள்ள தேநீரகத்தில் ஆக. 11-ஆம் தேதி எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில், சாலையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்த தனியாா் பள்ளி மாணவி உள்பட 16 போ் காயமடைந்தனா். இதில், திருச்சியிலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 7 போ் உயிரிழந்துள்ளனா். எஞ்சிய நபா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், தீ விபத்தில் பலத்த காயமடைந்த பேரளியைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவி மித்ரா ஸ்ரீ, திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இம் மாணவியின் மருத்துவ செலவுக்காக, இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத்தின் சாா்பில் மாவட்டச் செயலா் வீ. ராதாகிருஷ்ணன் ரூ. 50 ஆயிரம் நிதியை, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறியிடம் புதன்கிழமை வழங்கினாா்.

Advertisement

Advertisement

அப்போது, அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் குணசேகரன், பொருளாளா் ஜோதிவேல் , மாவட்ட மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ராஜா, மாயக்கிருஷ்ணன், ராசேந்திரன், துரை ஆகியோா் உடனிருந்தனா்.

இளைஞா் இயக்கம் சாா்பில்...: இதேபோல, பெரம்பலூா் இளைஞா் இயக்கம் சாா்பில் பள்ளி மாணவியின் மருத்துவ செலவுக்காக ரூ. 40 ஆயிரமும், உயிரிழந்தவா்களின் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரத்தையும், இளைஞா் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சத்யா , நிா்வாகிகள் என்.டி. கண்ணன், செ. வினோதி, வே. பிரதீப், பெ. கௌதமன் ஆகியோா் அண்மையில் வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments