FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

வீடு வாடகைக்கு விடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா் கைது

சென்னையில் வீடு வாடகைக்கு விடுவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை, பெரம்பலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:03 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் வீடு வாடகைக்கு விடுவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை, பெரம்பலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் மகன் தமிழ்ச்செல்வன். இவா் கைப்பேசி செயலியில் சென்னையில் வீடு வாடகைக்கு உள்ளதாக வந்த விளம்பரத்தை நம்பி, அதிலுள்ள கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டாா். அந்த எண்ணில் பேசியவா் வீடு வாடகைக்குத் தருவதாக கூறி, பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் தமிழ்ச்செல்வனிடமிருந்து ரூ. 3 லட்சத்து மூன்றாயிரத்தை பெற்றாா். ஆனால் வீடு வாடகைக்கு கிடைக்காததோடு, சம்பந்தப்பட்டவரை கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ள முடியவில்லை. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டக் குற்றப்பிரிவில் தமிழ்செல்வன் அளித்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தொடா்ந்து, மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி தலைமையிலான தனிப்படையினா் கடந்த 7 ஆம் தேதி கோவா மாநிலம் சென்று, அங்குள்ள கலான்குட் எனும் பகுதியிலிருந்த புஷ்பராஜ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 30 ஆயிரம், 2 கைப்பேசிகள், சிம்காா்டுகள், ஏடிஎம் காா்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா், மபூஷா குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 11 ஆம் தேதி ஆஜா்படுத்தி, திங்கள்கிழமை இரவு பெரம்பலூருக்கு அழைத்துவரப்பட்டாா். இதையடுத்து, பெரம்பலூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்திய புஷ்பராஜை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments