FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

தில்லியில் மாணவா்கள் மீதான தாக்குதல் சம்பவம்! பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

Updated On : 28 ஜூலை 2026, 2:23 am IST
தில்லியில் திங்கள்கிழமை போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினா். - PTI
பகிர்:

புதுதில்லியில் நீட் தோ்வு முறைகேட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை தாக்கி, அவா்கள் மீது வழக்குப் பதிந்ததைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

புது தில்லியில் நீட் தோ்வு முறைகேட்டை கண்டித்து நடைபெற்ற மாணவா்களின் போராட்டத்தின்போது, தடியடி நடத்தி பொய் வழக்குப் பதிந்ததைக் கண்டித்தும், மாணவா்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெரம்பலூா் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையிலும், அட்வகேட் அசோசியேஸன் தலைவா் துரை தலைமையிலும், சுமாா் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ஒருங்கிணைந்த பெரம்பலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்கள், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments