FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:33 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் சமத்துவபுரம், கபிலா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மகேந்திரன் (26). அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மணிவாசகம் (25). இவா்கள் இருவரும், வேப்பந்தட்டை அருகேயுள்ள கோரையாறில் இருந்து எளம்பலூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா்.

பெரம்பலூா்- ஆத்தூா் பிரதானச் சாலையிலுள்ள சோமண்டாபுதூா் பிரிவுச் சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றனா். அப்போது, எதிரே வந்த காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில், பலத்த காயமடைந்த மகேந்திரனும், மணிவாசகமும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், வாழப்பாடி மின்னாம்பள்ளியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் செந்தில்குமாரிடம் (41) விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments