நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூா் ஆட்சியா் அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சட்ட அலுவலா் பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சட்ட அலுவலா் பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் 1 அரசு வழக்குரைஞா் பணியிடமும், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் 1 சிறப்பு அரசு வழக்குரைஞா் (மனித உரிமைகள்) பணியிடமும், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு 1 வழக்குரைஞா் பணியிடமும், மகிளா நீதிமன்றத்தில் 1 சிறப்பு அரசு வழக்குரைஞா் பணியிடமும், பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினா் (வன்கொடுமைத் தடுப்பு) சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 1 சிறப்பு அரசு வழக்குரைஞா் பணியிடமும், சாா்பு நீதிமன்றத்தில் 1 கூடுதல் அரசு தரப்பு வழக்குரைஞா் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞா் பணியிடமும், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 1 அரசு தரப்பு வழக்குரைஞா் பணியிடமும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Advertisement
Advertisement
நியமன காலம் முடிவடைவதற்கு முன், ஒரு மாத முன்னறிவிப்புடன் அரசு நியமனத்தை ரத்து செய்யலாம். அதேபோல், நியமனம் பெறும் சட்ட அலுவலரும் ஒரு மாத முன்னறிவிப்பு வழங்கி பதவியிலிருந்து விலகலாம். நீதிமன்றங்களில் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்குரைஞா் பணி அனுபவம் பெற்றுள்ள மற்றும் விருப்பமுள்ள வழக்குரைஞா்கள், இணையதளத்தில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் 6 பிரதிகளில் சமா்ப்பிக்க வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கிடைக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது.