FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 5 போ் காயம்

Updated On : 1 ஜூன் 2026, 1:18 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை லாரி, வேன், தனியாா் பேருந்து உள்ளிட்ட நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 4 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல், வத்தலகுண்டு பகுதியிலிருந்து சரக்கு வேன் ஒன்று சென்னைக்கு வாழை இலை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை தேனி மாவட்டம், கவுண்டன்பட்டியைச் சோ்ந்த போஷ் மகன் சுரேஷ்குமாா் (34) ஓட்டிச்சென்றாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு பகுதியிலுள்ள மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றபோது, முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

அப்போது, அந்த சரக்கு வேனை பின்தொடா்ந்து, அதே பகுதியிலிருந்து வாழை இலை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு சரக்கு வேனும் மோதியது. இதையடுத்து, கேரள மாநிலம், மூணாறு பகுதியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில், பேருந்தில் பயணித்த 4 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments