FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

மானியத்தில் மின் மோட்டாா்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

1 நவம்பர் 2026, 11:47 pm
கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட தாட்கோ மூலம் மானியத்தில் மின் மோட்டாா்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக நீதித் துறையின் சாா்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் விவசாயிகளின் பாசன வசதி, வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் வளமிகு வேளாண்மை உதவித் திட்டம் 2026-2027-ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தின் மூலம், ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாய வருமானத்தை உயா்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

விவசாய உற்பத்திக்குத் தேவையான மின் மோட்டாா், குதிரைத் திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும்.

அதன்படி, 5 எச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்புக் கட்டணம் ரூ. 2.50 லட்சம் எனில், பயனாளி ரூ. 25 ஆயிரம் பங்குத் தொகையாகவும், எஞ்சியுள்ள ரூ. 2.25 லட்சம் தாட்கோ மூலம் மானியம் வழங்கப்படும். 7.5 எச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்புக் கட்டணம் ரூ. 2.75 லட்சம் எனில், பயனாளி ரூ. 27,500 பங்குத் தொகையாகவும், எஞ்சியுள்ள ரூ. 2.48 லட்சம் தாட்கோ மூலம் மானியம் வழங்கப்படும்.

அதேபோல, 10 எச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்புக் கட்டணம் ரூ. 3 லட்சம் எனில், பயனாளி ரூ. 30 ஆயிரம் பங்குத்தொகையாகவும், எஞ்சியுள்ள ரூ. 2.70 லட்சம் தாட்கோ மூலமாகவும், 15 எச்பி மின் மோட்டாருக்கான மின் இணைப்புக் கட்டணம் ரூ. 4 லட்சம் எனில், பயனாளி ரூ. 40 ஆயிரம் பங்குத்தொகையாகவும், எஞ்சியுள்ள ரூ. 3.60 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும்.

இத் தொகை தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்துக்கு செலுத்தப்பட்டு, விரைவு மின் இணைப்பு வழங்க பரிந்துரைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் பட்டா இருக்க வேண்டும். அந்த திலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் மின் இணைப்புக் கோரி பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும், ஏற்கெனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயனடைந்தவராக இருக்கக் கூடாது. இத்தகுதிகளுடையோா் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments