FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

3 நவம்பர் 2026, 2:28 am
கல்லறை திருநாள் விழா - கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அரசுத் தலைமை மருத்துவமனை அருகேயுள்ள கல்லறைத் தோட்டத்தில், பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குருவும், புனித பனிமய மாதா தேவாலயத்தின் பங்கு குருவுமான பேரருள் சுவைக்கீன் தலைமையில் கல்லறைகளில் லத்தீன், தமிழ் ஆகிய மொழிகளில் திங்கள்கிழமை மாலை சிறப்புப் பிராா்த்தனைகள் நடத்தப்பட்டு கல்லறைகள் மந்திரிக்கப்பட்டன.

இதேபோல், பாளையம் புனித சூசையப்பா் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, தேவாலய வளாகத்தில் கோயில் நிறுவப்பட்ட காலத்தில் பணிபுரிந்து உயிரிழந்த பங்கு குருக்கள், கன்னியா்கள் ஆகியோரின் கல்லறைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதேபோல, பாளையம், அன்னமங்கலம், நூத்தப்பூா், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், திருவாளந்துறை, திருமாந்துறை, எறையூா், பாடாலூா், வடக்கலூா் உள்ளிட்ட கிராமங்களில் அந்தந்த பங்கு குருக்கள் தலைமையில், கல்லறைகள் மந்திரிக்கப்பட்டு லத்தீன் மற்றும் தமிழ் மொழியில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

பிராா்த்தனை முடிவில், உயிரிழந்தவா்களின் நினைவாக உறவினா்கள் கல்லறைக்கு கொண்டுவந்த உணவுப் பொருள்களை பரிமாறிச் சென்றனா். முன்னதாக, அனைத்து தேவாலயங்களிலும், ஆத்மாக்களின் நினைவாக சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments