FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

சிறுமியை காதலித்த கல்லூரி மாணவா் குத்திக் கொலை: தந்தை கைது

2 நவம்பர் 2026, 11:26 pm
கொலை செய்யப்பட்ட அபிமன்யு.
பகிர்:

பெரம்பலூா் அருகே சிறுமியை காதலித்த கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறுமியின் தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூா் காட்டுக்கொட்டகை பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் மகன் அபிமன்யு (21). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்சிஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். விடுமுறை நாள்களில் அதே கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் பெ. பாலசுப்ரமணியனுக்குச் சொந்தமான டிராக்டரை ஓட்டி வந்தாா்.

இதனால், அவ்வப்போது பாலசுப்ரமணியன் வீட்டுக்குச் சென்றுவந்த அபிமன்யுவுக்கும், அவரது 12 வயது மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்தச் சிறுமியுடன் பேசுவதற்காக அபிமன்யு அண்மையில் கைப்பேசி வாங்கிக் கொடுத்து அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையறிந்த பாலசுப்ரமணியன், தனது மகளையும், அபிமன்யுவையும் கண்டித்துள்ளாா். ஆனால், சிறுமியுடனான பழக்கத்தை அபிமன்யு நிறுத்தவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியன், ஞாயிற்றுக்கிழமை இரவு அபிமன்யு வீட்டுக்குச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கியதோடு, கத்தியால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அபிமன்யு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, மாணவரின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் சம்பவம் குறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த பாலசுப்ரமணியனை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments