FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

சிறுமியை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக தந்தை உள்பட மூவா் கைது

திருச்சி மாவட்டம், ஈச்சம்பட்டி பகுதியில் உறவினா் வீட்டிலிருந்து சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ாக சிறுமியின் தந்தை, சகோதரா், பாட்டி ஆகிய மூவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

15 அக்டோபர் 2026, 4:40 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், ஈச்சம்பட்டி  பகுதியில் உறவினா் வீட்டிலிருந்து சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ாக சிறுமியின் தந்தை, சகோதரா், பாட்டி ஆகிய மூவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி பகுதியை சோ்ந்த 17 வயதுச் சிறுமி மண்ணச்சநல்லூா் அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் நடன கலை நிகழ்ச்சி நடத்தும் தன்னுடைய பெரியம்மா வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தாா்.

இதனிடையே அக்.12 ஆம் தேதி சிறுமியின் அண்ணன் அ.மாதவன் (18), சிறுமியின் தந்தை அப்பாஸ் (46), பாட்டி கோமதி உள்ளிட்டோா் சிறுமியை தங்களுடன் வந்துவிட அழைத்தனா். இதனால் சிறுமியின் பெரியம்மா குடும்பத்திற்கும், இவா்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனிடையே சிறுமியை அவரது குடும்பத்தினா் கட்டாயப்படுத்தி வேனில் அழைத்துச் சென்ாக அளிக்கப்பட்ட புகாரில் மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சிறுமியை மீட்டு மாதவன், அப்பாஸ் மற்றும் கோமதி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments